Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை  பார்க்கலாம்:

தென்மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார். ஆய்வை முடித்துக் கொண்டு இன்றிரவே அவர் சென்னை திரும்புகிறார்.       

மழை ஓய்ந்துவிட்ட போதிலும் சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி உள்ளிட்ட 12 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்துக்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிராவில் ஜேஎன் 1 என்ற புதிய வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டு உள்ளார். சிந்துதுர்க் மாவட்டத்தை சேர்ந்த 41 வயதுடையவருக்கு இந்த தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மழை பாதிப்பின் எதிரொலியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

579வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துவிட்டதாக ஹமாஸ் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடரை வெல்லும் வகையில் தென்னாப்பிரிக்காவுடனான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று களம் காண்கிறது. இந்த போட்டி பார்லன் நகரில் நடக்கிறது.

Most Popular