வேல்முருகனுக்கு கேட்டது கிடைத்தது…! கலக்கிய திமுக..! குஷியில் தவாக…!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதியை திமுக ஒதுக்கி இருக்கிறது.
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் தொகுதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரி, சில தொகுதிகளின் பெயர்களை கொண்ட பட்டியலையும் அக்கட்சி வழங்கி இருந்தது.
இந் நிலையில் பண்ருட்டி தொகுதியை அக்கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு ஏற்கெனவே இரு முறை வெற்றிப்பெற்றவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.