அடேயப்பா… அண்டப்புளுகு சீமான்…!
பொய் சொல்லலாம்… ஆனா ஏக்கர் கணக்கா சொல்லக்கூடாது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாகி நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார் நாம் தமிழர் சீமான்.
தேர்தல் காலம் என்பதால் களத்தில் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஊர்,ஊராக போய் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியின் விவசாயி சின்னம் பறிபோனது பற்றி பஞ்ச் வைத்துவிட்டு போகிறார்.
வழக்கம் போல், செய்தியாளர்களிடத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து கோபம் கொப்பளிக்க பேசி உள்ளார். அதில் 5 வயதில் கம்யூனிஸ்ட் கட்சி கொடியுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகளுக்கு சென்று போராட்டம் நடத்தியவன் நான், என்கிட்ட சேட்டை வச்சுக்க கூடாது என்று சீறி இருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் உருள… அவ்வளவுதான் நெட்டிசன்ஸ் வரிசையாக வந்து விழ தொடங்கி உள்ளனர். 5 வயதில் போராட்டம் பண்ணியவரா? சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலா? என்று இணையத்தில் தேடி பிடித்து தகவல்களை திரட்டி, சீமானை பின்னி எடுத்து வருகின்றனர்.
சீமான் பிறந்தது 1966ம் ஆண்டு. இப்போது அவருக்கு வயது 67. அவர் 5 வயதில் போராடினார் என்றால் கிட்டத்தட்ட 1971ம் ஆண்டு அவர் போராடி இருப்பார். சிவகங்கை மாவட்டமே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985ம் ஆண்டு தான் உதயமானது.
அரசு கெஜட்டில் அப்படித்தான் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டு உள்ளது. 1985ம் ஆண்டு உருவான சிவகங்கை மாவட்டத்துக்கு இவர் எப்படி 1971ம் ஆண்டே சென்று போராடி இருக்க முடியும்?
பொய் சொல்வதில் ஒரு அளவு இருக்க வேண்டாமா? எதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று உருட்டி தள்ளி வருகின்றனர்.