Sunday, May 04 12:10 pm

Breaking News

Trending News :

no image

ஓவர் ஸ்பீடு…! ஆண் நண்பர்களுடன் செம டான்ஸ்….! யாஷிகா விபத்துக்கு காரணமான டிரெஸ்


சென்னை: காரில் உள்ள சன் ரூப் திறந்துவிட்டவாறும், குத்தாட்டங்களுக்கு இடையே வண்டியை ஓட்டியதாலும் யாஷிகாவின் கார் விபத்துக்கு உள்ளானதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். அவரது தோழி வள்ளிசெட்டி பவானி இந்த விபத்தில் பலியானார். கை, கால், இடுப்பு எலும்பு ஒடிந்து தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

உயிர் பிழைத்துவிட்டாலும் யாஷிகா எழுந்து நடமாட 3 மாதங்களுக்கு மேல் ஆகுமாம். இப்படிப்பட்ட தருணத்தில் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி புது தகவல்கள் காவல்துறை மூலம் வெளிவந்து இருக்கிறது.

அந்த விவரங்கள் வருமாறு: யாஷிகாவின் தோழியின் பெயர் வள்ளிசெட்டி பவானி. இவர் அமெரிக்காவில் இருந்து கடந்தவாரம் சென்னை வந்துள்ளார். அவரும் இருவரின் ஆண் நண்பர்கள் சையது, அமீர் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றிருக்கின்றனர்.

அன்றைய தினம் ராத்திரி 10 மணிக்கு காரில் சென்னை நோக்கி காரில் பயணமாகி உள்ளனர். நள்ளிரவு 12 மணி இருக்கும்… இசிஆர் வழியாக மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்துக்கு வந்தபோது தான் விபத்து நிகழ்ந்து இருக்கிறது.

அப்போது தான் கார் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்திருக்கிறது. காரில் விபத்து நிகழ்ந்த தருணம் நள்ளிரவு நேரம். காரின் வேகம் 140 முதல் 160 கிமீ… உள்ளே இருந்த யாஷிகா, வள்ளிசெட்டி பவானி, சையது, அமீர் என அனைவரும் ஏக கூச்சல் போட்டபடி காரில் வந்திருக்கின்றனர்.

அவர்கள் வந்த கார் டாடா ஹரியர் வகை கார். ஓட்டுநர் சீட்டில் யாஷிகா. அதன் அருகில் வள்ளி செட்டி பவானி. பின் இருக்கையில் ஆண் நண்பர்கள் அமர்ந்திருக்கின்றனர். வள்ளி செட்டி பவானி சீட்டின் மீது ஏறி, காரின் sun roof (காரின் மேல்கதவு) திறந்து கைகளை ஆட்டிய படி, சத்தம்போட்டவாறு வந்திருக்கிறார். காரில் பாட்டு சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்திருக்கிறது.

இந்த நொடியில் தான் வள்ளிசெட்டி பவானியின் ஆடை காற்றில் பறந்து யாஷிகாவின் கண்களை மறைத்திருக்கிறது. ஏற்கனவே கைகளை ஸ்டிரியங்கில் இருந்து எடுத்து ஸ்டைல் காட்டி வண்டி ஓட்ட, கண்களும் மறைக்க காரை அப்படியே இடது புறம் முதலில் திருப்பி… அப்புறம் கண்ட்ரோல் இல்லாமல் போக வலதுபுறம் ஸ்ட்ரியங்கை வளைத்து இருக்கிறார்.

அவ்வளவு தான்… நொடியில் சாலை தடுப்பில் மோதி கார் அந்தரத்தில் பறந்திருக்கிறது. காரின் sun roofல் தலையை நீட்டியபடி ஆட்டம் போட்ட வள்ளி செட்டி பவானி அப்படியே அலேக்காக தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்.

வள்ளிசெட்டி பவானியும், யாஷிகாவும் சீட் பெல்ட் அணியவில்லை. பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஆண் நண்பர்கள் இருவரும் சீட் பெல்ட் அணிந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதற்கு இதுதான் காரணம். இந்த அனைத்து விவரங்களையும் காவல்துறையினர் தமது விசாரணை மூலம் கண்டறிந்து இருக்கின்றனர்.

Most Popular