சென்னையில் ரயில்கள் இயங்காது…! தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு
சென்னை: சென்னை புறநகர் ரயில் சேவை நாளை முதல் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரல் - கூடூர், எனாவூர் - கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்று ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை பீச்சில் இருந்து பகல் 12.40க்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10க்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும். சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 5.15க்கு வேளச்சேரி செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.