எப்ப வேணாலும் ‘அது’ நடக்கும்..! முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் வீடியோ…!
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் தளர்வுகளை திரும்ப பெறுவேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக கூறி இருக்கிறார்.
கொரோனா தொற்றுகளை குறைக்க பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கு எதிரொலியாக 30 ஆயிரம் என்று இருந்து கொரோனா தொற்று இப்போது 15 ஆயிரமாக குறைந்துள்ளது.
பாதிப்பு குறைந்திருக்கும் 27 மாவட்டங்களிலும் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தருணத்தில் முதலமைச்சர் வீடியோ திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். கொரோனா கால கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் அவை திரும்ப பெறப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: கொரோனா காலத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்ததால் இந்த தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. விதிகளை பின்பற்றிய அனைவருக்கு நன்றி.
ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டடது. அதற்காக மக்கள் அவசியம் இன்றி வெளியில் நடமாட வேண்டாம். கட்டுப்பாடுகளை கவனமாக பின்பற்றி வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
போலி மது, கள்ளத்தனமான மது தமிழகத்தை சீரழித்துவிடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் திறக்கப்பட்டு உள்ளது. அதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் எந்த நேரத்தில் மீறினால் உடனடியாக தளர்வுகளை திரும்ப பெறுவேன் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன்.
முழு ஊரடங்கு என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்வி நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். பொது போக்குவரத்து இயங்க வேண்டும, அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.