Sunday, May 04 12:17 pm

Breaking News

Trending News :

no image

அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு...! தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

இந் நிலையில், விநாயகர் சதுர்த்தி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பல இடங்களில்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக  கொண்டாடி வருகின்றனர்.

சிறிய கோவில்கள் மட்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள், சமூக இடைவெளியை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகின்றனர்.

Most Popular