Mr.விஷால்… ஊட்ல உட்காந்துட்டு பேசறே..? வெளிய வா…! விளாசிய மேயர்
சென்னை: மழை தண்ணீர் வீட்டில் புகுந்துவிட்டதாக கூறி வீடியோ போட்ட நடிகர் விஷாலை உண்டு, இல்லை என்று ஆக்கி இருக்கிறார் சென்னை மேயர் பிரியா ராஜன்.
யாரும் எதிர்பார்க்கவில்லை இந்த மழையை..! மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை பதம் பார்த்து இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடுப்பளவு தண்ணீர்.
மக்கள் படும் அவதியை சொல்ல முடியாத நிலை. எனக்கும் அப்படித்தான் இருக்கிறது? என் வீட்டில் தண்ணீர் புகுந்துவிட்டது என்று நடிகர் விஷால் வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார். அதில் தமிழக அரசை விளாசி பல விஷயங்களை பேசி இருந்தார்.
அதற்கு சென்னை மேயர் பிரியா ராஜன் பதிலடி தந்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
Mr.விஷால் இங்க யாரும் தூங்கல குடும்பத்தோட வீட்டுல உட்காந்து டிவி பாத்துட்டு இருக்கல நேற்று முதல் இன்று வரை அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் மகன் வரை களத்துல இறங்கி வேலை பார்த்துட்டு தான் இருக்கிறார்கள் என்பது வீட்டின் உள் இருந்து கொண்டு விமர்சிக்கும் உங்களுக்கு உங்களுக்கு எப்படி தெரியும்?
செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி.
2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!
அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்! என்று மேயர் பிரியா ராஜன் கூறி உள்ளார்.