கொரோனா தடுப்பூசி போட்டாலும்… இந்த 4 புதிய அறிகுறி இருந்தால் ஜாக்கிரதை…! வெளியான ‘ஷாக்’ தகவல்
லண்டன்: 4 புதிய அறிகுறிகள் இருந்தால் தடுப்பூசி போட்டிருந்தாலும் அது கொரோனா என்று லண்டன் விஞ்ஞானிகள் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி கொரோனாவை பற்றிய புது புது விஷயங்கள், செய்திகள் தான் இப்போது மக்களை ஆட்டுவித்து வருகிறது. கொரோனா தொற்றால் உலக நாடுகள் மிரண்டு போயிருக்கின்றன. கொரோனாவின் அறிகுறிகள் இதுதான் என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.
புதுசு, புதுசாக அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. கொரோனாவை வெல்லும் ஆயுதம் தடுப்பூசி என்று ஒரு பக்கம் இருந்தாலும்.. தடுப்பூசி போட்டவர்களையும் கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. ஆகையால் தடுப்பூசி போட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந் நிலையில் கொரோனாவின் புதிய அறிகுறிகள் என்று 4 அறிகுறிகளை லண்டனில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி கல்லூரி வெளியிட்டு உலகையே திகிலடைய வைத்துள்ளது. இந்த அறிகுறிகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் இருக்கிறது என்பது தான் யாரும் எதிர்பாராத திருப்பம்.
அவர்கள் கிட்டத்தட்ட 11 லட்சம் மக்களிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர். முன்னர் தொற்று பரவி இருந்த நேரத்தில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்று போக்கு ஆகியவை அறிகுறிகளாக சொல்லப்பட்டன. ஆனால் இப்போது இந்த அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா தொற்று ஏற்படுகிறது.
தடுப்பூசி போட்டவர்களில் 60 வயதுக்கும் கீழ் 24 சதவீதம் மக்களுக்கு தும்மல் அறிகுறி இருந்திருக்கிறது. 2வது மூச்சு திணறல் இருக்கிறது, 3வதாக கழுத்திலும், அக்குள் பகுதியிலும் வீக்கம் வருமாம். சில நாளில் இந்த வீக்கம் காணாமல் போய்விடுமாம். இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் கொரோனா என்கிறார்கள்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி பேராயுதம் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது டிசைன், டிசைனாக அறிகுறிகள் இருப்பதால் உண்மையில் மக்கள் குழம்பித்தான் போய் இருக்கின்றனர்.