Sunday, May 04 12:20 pm

Breaking News

Trending News :

no image

கைதாகும் திமுக அமைச்சர்…? டிச.21ல் நடக்கப் போவது என்ன..?


சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நீதிமன்றம் வரும் 21ம் தேதி தண்டனை அறிவிக்க உள்ளதால் திமுக தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2006ம் ஆண்டு விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம் செய்ததாக தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

தண்டனை விவரங்கள் வரும் 21ம் தேதி அறிவிக்கும், அன்றைய தினம் அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை உறுதியாகிவிட்டதால் திமுக தலைமை சற்றே அதிர்ந்து போயிருக்கிறது. தண்டனை விவரங்களை பொறுத்து அமைச்சர் பதவி பற்றி தீர்மானிக்கப்படும். சிறை செல்ல வேண்டிய தருணம் என்னும் போது, அமைச்சர் பதவி பறிக்கப்படும்.

ஒருவேளை சிறை தண்டனை என்பது 2 ஆண்டுகளுக்கு மேல் என்ற பட்சத்தில் எம்எல்ஏ பதவி பறிபோவதோடு, அடுத்து வரும் 10 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

இப்படி நிறைய சவால்கள் உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை திமுக மட்டும் அல்லாது எதிர்க்கட்சிகளும் உற்று நோக்க ஆரம்பித்துள்ளன.

ஒருவேளை அனைத்தும் எதிராக இருக்கும் பட்சத்தில் தற்போதுள்ள நிலை திமுகவுக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Most Popular