Sunday, May 04 12:06 pm

Breaking News

Trending News :

no image

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் எப்போது…? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு


சென்னை: தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டு உள்ளார். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி கூட்டப்படுகிறது. அன்றைய தினமே தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது.

முற்பகல் 11 மணிக்கு 2021-22ம் ஆண்டின் பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்துககு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் வெளிவர உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular