குஷ்பு… சோத்துல உப்பு போட்டு தான் திங்கிறீங்களா….? வீரலட்சுமி வேற லெவல்
சென்னை: சோத்துல உப்பு போட்டு திங்குறது உண்மையா இருந்தா….. என்று நடிகை குஷ்புவுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் தமிழர் முன்னேற்ற படையின் வீரலட்சுமி.
அவ்வளவு விரைவில் குஷ்பு, சேரி மொழி என்ற விவகாரம் நிறைவு பெறாது என்றே தோன்றுகிறது. சேரி மொழியை குறிப்பிட்டு பதிவிட்ட குஷ்புவுக்கு எதிராக தமிழகத்தில் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
காவல்நிலையத்தில் புகார், போராட்டம் என அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் இறங்கி இருக்க… லேட்டஸ்ட்டாக தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த வீர லட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் குஷ்புவை போட்டு தாக்கிய அவர், தமிழ் பாட்டு ஒன்றை ஒலிபரப்பியும் அசத்தி இருக்கிறார்.
மேலும் குஷ்புவுக்கு எதிராக வரும் 27ம் தேதி தமது தமிழர் முன்னேற்ற படை போராட்டத்தில் இறங்க உள்ளதாகவும், போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். அவரின் வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.