வெளுக்கும் கனமழை…! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நீலகிரி: தொடரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை கொட்டி வருகிறது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவை, நீலகிரியில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது.
இந் நிலையில் தொடர் மழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் பாதைகளில் மழை காரணமாக மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்துள்ளதால் மின்வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நிலைமையை சீர் செய்யும் பணியில் மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் இறங்கி இருக்கின்றனர்.