Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

ஜனாதிபதி, பிரதமர் மோடி To முதல்வர் ஸ்டாலின்…! யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?


குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கான சம்பளம் என்ன என்பது பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியாது. ஆனாலும் அவர்களுக்கும் சம்பளம் என்பது நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் சம்பளம் தான் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாகவே உள்ளனர்.

நாட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர் தமது முதல் குடிமகன் ஜனாதிபதி தான். அவருக்கு சம்பளம் 5 லட்சம் ரூபாய்.. அதாவது இது அடிப்படை சம்பளமாகும். இந்த ஊதியத்துடன் மற்ற சலுகைகளும் இருக்கின்றன. இவருக்கு அடுத்தபடியாக குடியரசு துணை தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு சம்பளம் 4 லட்சம் ரூபாயாகும். இவருக்கும் சலுகைகள் ஏராளமான இருக்கின்றன.

அவர்களுக்கு அடுத்தபடியாக அந்தந்த மாநில ஆளுநர்களின் சம்பளமாகும். கவர்னர்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஊதியம். நாட்டின் பிரதமருக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் ஒரு ஆவல் அனைவருக்குமே எழுவது இயற்கை.

பிரதமரின் சம்பளம் 2 லட்சத்து 80 ஆயிரம்… இத்துடன் பல சலுகைகள் இருக்கிறது. பதவிக்காலம் முடிந்த பின்னரும் வாழ்நாள் முழுதும் வாடகையின்றி தங்கும் வசதி அளிக்கப்படும்.

மருத்துவ சலுகைகள், அலுவலக பணியாளர்கள் வசதி ஆகியவையும் உண்டு. அனைத்து செலவுகளையும் அரசே பார்த்துக் கொள்ளும். கூடுதல் அளவாக 6 எக்சிகியூட்டிவ் விமான வகுப்பு டிக்கெட்டுகள், 5 ஆண்டுகளுக்கு இலவச ரயில் பயணம் உண்டு.

சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு மாதம் 2 லட்சத்து 80 ஆயிரம் ஊதியம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்றால் இரண்டரை லட்சம், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஆர்பிஐ ஆளுநர் ஆகியோருக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் தரப்படுகிறது. இவர்களுக்கும் ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

குடியரசு தலைவர் முதல் ஆளுநர்கள், தேர்தல் ஆணையர் வரை அனைவரின் ஊதியத்தை பற்றி தெரிந்து கொண்டோம்.. இப்போது மாநில முதலமைச்சர்களுக்கு என்று ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அல்லவா..?

அதை பார்ப்போம்… நாட்டில் அதிகப்பட்ச முதல்வர் ஊதியம் என்பது உத்தரபிரதேச மாநில முதல்வருக்கு தான். 3 லட்சத்து 65 ஆயிரம் தரப்படுகிறது. ஆந்திர முதல்வருக்கு 3.35 லட்சம், மகாராஷ்டிரா முதல்வருக்கு 3 லட்சத்து 40 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வருக்கு அளிக்கப்படும் சம்பளம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இவை அனைத்தும் முதலமைச்சர்ளுக்கான அடிப்படை ஊதியம்தான். வழக்கமாக அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் உண்டு

நாட்டில் குறைந்தபட்சமாக சம்பளம் பெறும் முதல்வர்களும் உண்டு. நாகலாந்து மாநில முதல்வருக்கு சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகும். எத்தனை லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தால் என்ன…? அவர்களின் மக்கள் பணிதான் இந்நாட்டுக்கு தேவை…!

Most Popular