ஆவின் பால் எடை குறைவா..? சங்கிகளை சல்லி சல்லியா நொறுக்கிய வீடியோ
சென்னை: ஆவின் பாலில் எடை குறையவில்லை என்று வீடியோ போட்டு திமுக ஆதரவாளர்கள் பாஜகவை திணறடித்து வருகின்றனர்.
திமுக மீது எப்போதும் குறை சொல்லியபடி அரசியலை நகர்த்தி கொண்டு இருக்கும் பாஜக இப்போது ஒரு புதிய குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறது.
கடந்த 2 நாட்களாக தலைநகர் சென்னையில் விற்பனைக்கு வந்த ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 500 மில்லி லிட்டருக்கு பதிலாக பாலின் எடை குறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து பால் முகவர்கள் ஆவின் நிறுவனத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆவின் பாலில் எடை குறைப்பு, மோசடி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட அறிக்கை விட்டு திமுக அரசை காய்ச்சி எடுத்தார்.
திமுக ஆட்சியின் வித, விதமான ஸ்டைலில் ஊழல் நடைபெறுவதாக அறிக்கை விட்ட அவர், மக்களிடம் இருந்து அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
இந் நிலையில் உண்மை என்ன என்பது பற்றி திமுக விசுவாசிகள், திமுக ஐடி விங் ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அதில் எடை குறைவான பால் பாக்கெட்டும், ஒரு புறமும் மற்றொரு புறமும் இன்றைய தேதி அச்சிட்ட 500 மிலி பால் பாக்கெட்டையும் எடை போட்டு பார்க்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
ஆனால் 509 கிராம் முதல் 511 கிராம் எடை காட்டுகிறது. இந்த வீடியோ மூலம் ஆவின் பால் எடை குறையவில்லை, சரியான எடையில் தான் வினியோகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆவின் பாலில் எடை குறைப்பும் இல்லை, மோசடியும் இல்லை, பொய் செய்தியை பாஜகவும், அதன் துணை அமைப்புகளும் பரப்புகின்றன என்று பதிலடி அளித்து வருகின்றனர்.
சரி… அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கட்டும், அறிக்கைகளும், பதிலடிகளும் அப்படிய இருக்கட்டும். ஒரு அரை லிட்டர் பாக்கெட் பாலில் உள்ள அளவுகள் என்ன? அதை எப்படி கண்டறிவது என்ற விவரங்களை டுவிட்டராட்டிகள் இணையத்தில் வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கின்றன.
கிராம் அளவில் 511.44 என்று இருக்க வேண்டும் (அதாவது 500 மிலி).
அவுன்ஸ் என்று எடுத்துக் கொண்டால் 18.04 அவுன்ஸ்
பவுண்டில் கணக்கு வைத்தோமானால் 1.13 பவுண்டஸ்
இதுவே கிலோ கிராமில் என்றால் 0.51 கிலோ கிராம்ஸ்
என இருக்க வேண்டும் என்று கூகுள் பதில்களை தட்டி தெறிக்கவிட்டு உள்ளனர். பொய் செய்திகளை பரப்புவதில் பாஜகவுக்கு நிகர் பாஜக தான் என்றும் விமர்சித்து வருகின்றனர் திமுகவினர். எது உண்மை என்பது ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ள விசாரணையின் மூலம் வெளிவரும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்…!