TNPSC முக்கிய அறிவிப்பு இதோ…! வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலி பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் 21ம் தேதி கடைசி நாளாகும். எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.