சூப்பர்…! மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி சலுகை…!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசிகளை உலகளாவிய ஒப்பந்தம் மூலம் பெற்று நடவடிக்கை எடுப்பது.
இந் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெற தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி மையங்களிலும் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும். தேவை இருப்பின், மாற்றுத்திறனாளி துறையுடன் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.