அரசியலா… ஆன்மீகமா..? முக்கிய முடிவை எடுத்த சசிகலா…?
சென்னை: அரசியலா? ஆன்மீகமா? எதை தேர்ந்தெடுக்கலாம் டிடிவி தினகரன் மகள் திருமணத்திற்கு பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏதோ மாயாஜாலம் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளன. மற்ற தொகுதிகளை விட கோவில்பட்டியில் எப்படியும் ஜெயித்து சட்டசபைக்குள் நுழைந்துவிடலாம் என்று எதிர்பார்ப்பு பொய்யாகி போனது.
இதே அதிர்ச்சி தான் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எப்படியும் 50 தொகுதிகளுக்கு கீழே குறைந்தால் தமது அரசியல் பகடை உருட்டலாம் என்று திட்டம் பணாலாகி போனதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறராம் சசிகலா.
அதே நேரத்தில் மீண்டும் அரசியல் என்ட்ரி, ஒரு அதிரடி அறிக்கை என்று ஆதரவாளர்கள் சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனராம். ஆனால் எதற்கு பதில் கூறாமல் மவுனத்தை பதிலாக தந்து வருகிறாராம் சசிகலா. சட்டசபை தேர்தல் படுதோல்வி பெரும் இடியாக இருப்பதால் சசிகலா படு அப்செட்டில் இருப்பதாகவும், தற்போதைக்கு அரசியலுக்கு நோ என்ட்ரி என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்து டிடிவி மகள் திருமணம், ஊரடங்கு கட்டுப்பாடு ஆகிய காரணங்களும் மீண்டும் அரசியலுக்குள் நுழைய தயக்கத்தை தருவதாகவும் அனைத்தும் முடிந்த பிறகு மீண்டும் ஆன்மீக பயணத்தை தொடர சசிகலா முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ஆதரவாளர்கள் படு அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.