நாளை ஸ்கூலுக்கு போக வேண்டாம்…! ‘செம’ அறிவிப்பு
சென்னை: தலைநகர் சென்னையில் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தினமும் பெய்து தள்ளும் மழை நிலவரம் காரணமாக, சூழலுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.
அதன் காரணமாகவே நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு உள்ளார்.
ஆனால் தனியார் பள்ளிகள் எப்போதும் போல் செயல்படும் என்றும், விடுமுறை கிடையாது என்றும் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.