மதுப்ரியர்களே… வரப்போகுது ஷாக் நியூஸ்…! விரைவில் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா என்றும் கொடிய தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. லாக்டவுன் தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
லாக்டவுன் நிலைமைகள் இப்படி இருக்க, சில நாட்களாகவே பார்களில் மதுபானங்கள் விலை ஏகத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக புலம்பல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை சர்ரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு மதுபானங்கள் விலை அதிகரிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இப்போது மதுபானங்கள் ரேட் உயர்த்தப்பட்டு உள்ளன.
தற்போது நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்… என்ன நடந்தது தெரியுமா? எதிர்பார்த்தபடி வியாபாரம் பெரிய அளவு இல்லை. இது டாஸ்மாக் சூப்பர்வைசர்களுக்கு பெரும் அடியாக இருக்கிறது.
இப்போது குடோன்களின் தேக்கம் அடைந்துள்ள மதுபானங்களை சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருவதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால் பழைய சரக்குகளை தான் விற்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
100 முதல் 150 ரூபாய் வரை உள்ள சரக்குகள் சேல்சாகிவிட்டன. 200 ரூபாய்க்கு விலை உள்ள பானங்கள் குடிமகன்கள் தலையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறதாம். இப்படி குடிமகன்கள் திண்டாட்டத்துடன் இருக்க, மதுபானங்களின் விலைகளை உயர்த்த அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.