நவ.1 முதல் கல்லூரிகள் ஓபன்…! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான 2020- 2021 கல்வியாண்டு அட்டவணையை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கலாம். அக்டோபர் இறுதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
முதல் பருவத்தேர்வுகள் 2021ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் 4ம் தேதி வரை விடுமுறை விடப்படும். பின்னர் ஏப் 5ம் தேதி முதல், 2ம் செமஸ்டர் வகுப்புகள் தொடங்கும்.
2ம் செமஸ்டர் தேர்வுகள் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 21க்குள் நடத்தப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்படும். 2021- 22ம் கல்வியாண்டு, முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.