Sunday, May 04 11:43 am

Breaking News

Trending News :

no image

பாஜக வேட்பாளரை செஞ்சிட்டீங்க.. உடன்பிறப்புகளே…!


எதையாவது பேசி, வாங்கி கட்டிக் கொள்வது என்பது அனைத்துக் கட்சிகளுக்குமே நடக்கக்கூடிய ஒன்று. அதில் லேட்டஸ்ட்டாக சிக்கி இருப்பது பாஜக. மாட்டி இருப்பது அக்கட்சியின் நீலகிரி வேட்பாளர் எல். முருகன்.

உதகையில் வேட்பு மனு தாக்கலின் போது பரபரப்பை கூட்டிய வேட்பாளர் மற்றும் கட்சி பாஜகவின் எல். முருகன். வேட்பு மனு தாக்கல் முடிந்தது… பிரச்சாரமும் தொடங்கியாச்சு.

தமது பிரச்சாரத்தில் அவர் பேசும் விதம் தான் கொஞ்சம் புதுசாக இருக்கின்றனர் என்கின்றனர் அருகில் இருந்து பார்ப்பவர்கள். லேட்டஸ்ட்டாக நீலகிரி என்று கூகுளில் தட்டினால் 2ஜி தான் என்று வருகிறது என்று பேட்டி அளித்து இருந்தார்.

2 ஜி என்றாலே திமுகவுக்குகிலி என்பது பாஜகவின் விமர்சனம். இப்போது அதை எல். முருகன் அடிக்கோடிட்டு காட்ட, திமுக தரப்பு பதிலடி தந்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தமிழ் கா. அமுதரசன் இது பற்றி எக்ஸ் வலை தள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை போட்டுள்ளார்.

அதில் எல். முருகன் பேசிய வீடியோவை பகிர்ந்து அதன்படி கூகுளில் நீலகிரி என்று டைப் அடிக்கிறார், அவர் பேசியதை தவிர்த்து, மற்ற விஷயங்கள் எல்லாம் வரிசையாக பட்டியலாகிறது. கூகுளில் வந்த ஒரு செய்தியான, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய நீலகிரி அதிமுக, பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு என்ற செய்தியையும் தமிழ் கா. அமுதரசன் க்ளிக் செய்து காட்டுகிறார்.

இதை காணும் உடன்பிறப்புகள், இன்ன பிற திமுக அபிமானிகள், பாஜக எதிர்ப்பாளர்கள் இஷ்டத்துக்கும் வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular