Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

விடுதலையாகிறார் சசிகலா…! தேதியை அறிவித்த பெங்களூரு சிறை நிர்வாகம்


பெங்களூரு: அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சிறையில் உள்ள சசிகலா விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாவார்கள் என்பது பற்றி தகவல்கள் அவ்வப்போது வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

இந் நிலையில், சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை காரணமாக இந்தாண்டு இறுதிக்குள் முன்கூட்டியே ரிலீஸ் ஆவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அது பற்றிய உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் சசிகலாவின் விடுதலை பற்றி விவரம் கேட்டு இருந்தார்.

அதற்கு பதில் தந்துள்ள சிறை நிர்வாகம், 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அவர் விடுதலையாவார் என்று பதிலளித்துள்ளது. இந்த விவரம் அமமுகவினருக்கு மகிழ்ச்சியையும், அதிமுகவினருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்பதும் இப்போது தெரிய வந்து உள்ளது.

Most Popular