விஜயகாந்த் ‘வீட்டுக்கு’ போன உதயநிதி…! என்ன பேசினார் தெரியுமா..?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றார். கட்சி நிர்வாகிகளுடன் சென்ற உதயநிதி, விஜயகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
சந்திப்பின் போது, பிரேமலதா, சுதிஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உதயநிதிக்கு சுதிஷ் பதிலுக்கு சால்வை போர்த்தி வாழ்த்துகளை கூறினார். கூட்டணியில் இல்லாத விஜயகாந்தை சந்தித்து உதயநிதி பேசியதாக அரசியல் நாகரிகமாக கருதப்படுகிறது.
அதன் பின்னர் மதிமுக பொது செயலாளர் வைகோ, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில செயலாளர்கள் முத்தரசன், கோபாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரை சந்தித்தும் வாழ்த்து பெற்றார்.