விஜயகாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..? லேட்டஸ்ட் PHOTO…!
சென்னை;தலையில் முடி கொட்டி போய், ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜயகாந்த் போட்டோ வெளியாகி ரசிகர்களை கண்ணீர்விட வைக்கிறது.
சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார் கேப்டன் விஜயகாந்த். அவரின் உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது? என்று கேள்விகளை எழுப்பி ஆவலுடன் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, 14 நாட்கள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும், தீவிர சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தது. இந்த அறிக்கை தொண்டர்களை மேலும் டென்ஷனாக்க, விஜயகாந்த் குணம் பெற பிரார்த்தனைகளும் தொடர்ந்தன.
ஆனால் நாள்தோறும் விஜயகாந்த் உடல்நலம் பற்றி நேர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந் நிலையில், விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த போட்டோவில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். உடல் மெலிந்து, தலையில் முடி கொட்டிப்போய், கழுத்தில் சதை தொங்கியபடி, குளிர் கண்ணாடி அணிந்து உட்கார்ந்திருக்கிறார். அருகில் அவரது மனைவியும், மகனும் இருக்கின்றனர். செல்போனில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது நன்றாகவே தெரிகிறது.
இந்த போட்டோவை இணைய தளத்தில் பார்த்த ரசிகர்கள், தொண்டர்கள் வேதனையின் விளிம்புக்கே சென்றிருக்கின்றனர். சினிமாவில் பறந்து, பறந்து வில்லன்களை புரட்டி எடுத்த உடல்வாகு, அரசியல் மேடைகளில் காணப்பட்ட ஆவேசம் என எதுவும் இல்லாமல் இருக்கும் விஜயகாந்த் போட்டோவை கண்டு கண்கலங்கி வருகின்றனர்.
அதே சமயத்தில், உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்பி மன வேதனையை உண்டாக்க வேண்டாம் என்று பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.