நடிகர் தனுஷூக்கு தேசிய விருது அறிவிப்பு…! விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகர்…!
டெல்லி: அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. 2019ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியத்தில் வெளியான படம் அசுரன். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை பெற்றுள்ளது. அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் படத்துக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.