தொடரும் பெட்ரோல் விலை…! அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன ‘அந்த’ வார்த்தை…!
சென்னை: பெட்ரோல் விலை ஏறியது தமக்கு தர்மசங்கடமாக உள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியதாவது: பெட்ரோல் , டீசல் விலை அதிகமாக தான் உள்ளது. எனக்கும் அது தர்மசங்கடமாக தான் உள்ளது. விலையை குறைக்க வரி குறைப்பு பற்றி மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரான என்னால் மட்டுமே எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.