டீக்கடையில் CM…! செல்பிக்கு முந்திய மக்கள்
தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளை பின் தங்கி சுறுசுறுப்பாகி இருக்கிறது திமுக. அக்கட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் தஞ்சையில் உள்ள விடுதியில் தங்கிய ஸ்டாலின், இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இன்று காலை தான் தங்கியிருந்த விடுதியில் இருந்த வெளியே வந்த அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
திடீரென முதலமைச்சர் அங்கு நடப்பதை கண்ட மக்கள் ஆர்வம் கொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தங்களின் ஆதரவையும் அளித்தனர்.
கீழராஜ வீதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வெகு சகஜமாக அமர்ந்து டீ அருந்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.