1 லட்சம் பேர் கொரோனாவால் பலி…! 'ஷாக்' தரும் இந்தியாவின் நிலவரம்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இன்னமும் உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா உள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பலன் கொடுத்ததா என்று தெரியவில்லை.
இந் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 768 ஆக இருக்கிறது.