Sunday, May 04 12:24 pm

Breaking News

Trending News :

no image

நீ உழைக்கணும் உதயநிதி…! முன்னேறணும்


சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னேறணும் என்று கூறி கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறி அசத்தி உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர். அரசியலையும் கடந்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திரையுலகில் இருந்தும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் எப்போதும் வித்தியாசமாக வாழ்த்து கூறும் கவிஞர் வைரமுத்து இம்முறையும் இம்மி பிசகாமல் அதை செய்துள்ளார்.

எக்ஸ் பதிவில் அவர் வாழ்த்து தெரிவித்து கலக்கி இருக்கிறார். அதில் வைரமுத்து கூறி உள்ளதாவது:

தெளிவாய் உள்ளது கொள்கை

திடமாய் உள்ளது இயக்கம்

ஒளியாய் உள்ளது பாதை

உழைப்பதுதான் உன் வேலை

 

பின்னோரை முன்னேற்ற

முன்னோரைப் பின்பற்று

உதயநிதிக்கு

இதய வாழ்த்து என்று பதிவிட்டு உள்ளார்.

அரசியலில், கலையில் இன்னமும் சாதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும் என்பதை அர்த்தம் கொண்டே வைரமுத்து வாழ்த்து இருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள். ஆக உதயநிதிக்கு கடமையும், வேலையும் நிறைய இருக்கிறது….!

Most Popular