இன்று முதல் இவர் இசைஞானி மட்டுமல்ல… இளையராஜா எம்பி…
டெல்லி: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கிறார்.
இளையராஜா, பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக கடந்த 6ம் தேதி அறிவிக்கப்பட்டனர். கடந்த 18ம் தேதி நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 2 பேர் நியமன எம்பிக்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆனால் இளையராஜா, பிடி உஷா ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருப்பதால் கூட்டத்திற்கு வரமுடியவில்லை என்று இளையராஜா தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந் நிலையில், எம்பியாக இன்று இளையராஜா பதவியேற்கிறார். அதற்காக நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் நிலையில் அந்த விழா முடிந்த பின்னர் இளையராஜா எம்பியா பதவியேற்பார் என்று தெரிகிறது.