Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

விசிக… மதிமுக… ரெண்டு கட்சிகளும் வரலாம்..! திமுக 'திடீர்' அழைப்பு


சென்னை: விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இடையே நாளை தொகுதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 23 தொகுதிகளை பெற்று தமது அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளில் வேகம் எடுத்துள்ளது. தேமுகதிகவுடன் விரைவில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந் நிலையில் திமுகவும் தமது கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகி வருகிறது. முதல் கட்டமாக நாளை விசிக, மதிமுக ஆகிய கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருக்கிறது.

டிஆர் பாலு தலைமையிலான குழுவுடன் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்துவர் என்று கூறப்படுகிறது. நாளைய பேச்சுவார்த்தையின் போது இவ்விரு கட்சிகளுக்குமான தொகுதிகள் பற்றிய பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

Most Popular