12வது நாளாக பிரணாப் உடல்நிலை…! புதிய தகவல் வெளியிட்ட டெல்லி மருத்துவமனை
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் 12வது நாளாக எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் குழு அறிவித்துள்ளது.
2012ல் காங்கிரஸ் ஆட்சியின் போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் பிரணாப் முகர்ஜி. தமது இல்லத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மூளையில் ரத்தம் கட்டி இருப்பதும் தெரிய வந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் 12 நாட்களாக சிகிச்சையில் உள்ளார்.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து கோமா நிலையில் தான் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.