இந்தியாவில் மரண மாஸ் காட்டும் கொரோனா...! மொத்த பாதிப்பு 17 லட்சம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கிவிட்டது.
உலகையே ஒரு வழியாக்கிய கொரோனா இந்தியாவையும் உண்டு, இல்லை என்று பண்ணி வருகிறது. தொடக்கத்தில் வெகு இலகுவாக மதிப்பிடப்பட்ட கொரோனா இப்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை எட்டியுள்ளது. இப்போது இதுவரை இல்லாத அளவு 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. மிக விரைவில் 17 லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511 ஆக உள்ளது. 10,97,374 கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,93,58,659 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.