பட்டதாரியா..? ரூ. 60,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!
சென்னை: பட்டதாரிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியிடம் காலியாக உள்ளது.
என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனியர் கன்சல்டன்ட், சீனியர் அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க இந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் https://ncert.nic.on என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி, உள்ளிட்ட முதுகலை படிப்பில் 55 சதவீதம் மார்க் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர பிஇ, பிசிஏ, பிடெக்(கம்பயூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/ஐடி) பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்க ஆவர். அடிப்படை சம்பளம் 23 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.