நம்ப முடியல...! அதிமுகவை ஓவர்டேக் செய்த பாஜக…!
சென்னை: அதிமுகவை முந்திக் கொண்டு மின்கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக வரும் 23ம் தேதி போராட்டம் நடத்துகிறது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். அதன்படி 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் மாற்றம் இல்லை. இந்த மின்சார சலுகை வேண்டாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் 200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாய், 301 முதல் 400 யூனிட் வரை 142.50 ரூபாய், 500 யூனிட்டுக்கு மேல் 298.50 ரூபாய் கூடுதலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழக மக்களை ஷாக் அடித்துள்ள இந்த கட்டண உயர்வு நுகர்வோர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் தமிழக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
மின்கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக வரும் 25ம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தது. பாஜகவும் தற்போது போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. வரும் 23ம் தேதி இந்த போராட்டத்துக்கு பாஜக நாள் குறித்துள்ளது. அதிமுக அறிவித்த நாளுக்கு முன்பாகவே பாஜக முந்திக் கொண்டு தங்களது போராட்டத்தை நடத்துகிறது.