கேஸ் விலை எவ்வளவோ…? வந்தாச்சு புது அறிவிப்பு
டெல்லி: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் வர்த்தக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது இதன் விலை நிலவரம் மாற்றி அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போதும் விலை பற்றிய லேட்டஸ்ட் அறிவிப்பு ரிலீசாகி உள்ளது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1999.50 என்பதில் இருந்து 57 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது, தற்போது ஒரு சிலிண்டர் விலை 1943 ரூபாயாக இருக்கிறது.
தொடரும் விலை உயர்வு தற்போது குறைக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.