12 கேட்டா 6 தருவேன் என்கிறார்கள்..! அதிமுகவுடன் மல்லுக்கட்டும் வாசன்…!
சென்னை: 12 தொகுதிகள் கேட்டால் 6 தொகுதிகள் தருவதாக அதிமுக கூறுகிறது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறி உள்ளார்.
அதிமுக 171 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. பாமக 23, பாஜக 20 என்று தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. இந் நிலையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சியான தமாகாவின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.
இந் நிலையில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஜிகே வாசன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுகவில் நம்பிக்கைக்கு உரிய கூட்டணி கட்சியாக நாங்கள் உள்ளோம். 12 தொகுதிகள் கேட்டோம். ஆனால் 6 தொகுதிகள் தான் தருவோம் என்று கூறி உள்ளனர். விரைவில் அதிமுக கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று கூறினார்.