Sunday, May 04 11:51 am

Breaking News

Trending News :

no image

அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி…! சசிகலாவின் ‘3 தொகுதி’ பிளான்…!


சென்னை: 3 தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஒரு சூப்பர் பிளானை சசிகலா கையில் எடுத்திருப்பதை கண்டு அதிமுக தலைமை ஷாக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் பாதையில் இருந்து விலகிவிட்டேன் என்று சசிகலா அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தினசரி ராசிபலன் போல, தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

கட்சி காப்பாத்த நிச்சயம் வருவேன், கொரோனா முடியட்டும் தொண்டர்களை சந்திப்பேன், யாரையும் கைவிடமாட்டேன் என்று அவர் பேசும் ஆடியோக்களை தொண்டர்களை குஷியோ, குஷியாக்கி வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தலைமையை அசைத்தும் பார்த்து இருக்கிறது.

இப்படியே விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணிய தலைமை பேசுபவர்களை கட்டம் கட்டி வீட்டுக்கு அனுப்பியது. மாவட்டம் தோறும் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் நிற்கவில்லை.

தொடக்கத்தில் சசிகலாவின் ஆடியோக்களை அசால்ட்டாக விட்டுவிட்ட எடப்பாடி பழனிசாமி இப்போது செம கலக்கத்தில் இருக்கிறாராம். அதிமுக கட்சி தலைமையும் ஒரு வித உளைச்சலில் இருக்கிறதாம். அதற்கு காரணம் 3 முக்கிய தொகுதிகளில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசும் நடவடிக்கையை அவர் கையில் எடுத்ததுதான் காரணமாம்..!

மாநிலம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் மனநிலை என்ன என்பது பற்றி நாள்தோறும் அவருக்கு தகவல்கள் வந்து சேர்கின்றதாக கூறப்படுகிறது. தொண்டர்கள் அனுப்பி வரும் கடிதங்கள், செல்போன் உரையாடல்கள் என நாளும் பிசியாக இருக்கிறார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தொண்டர்கள் கடிதங்களை படிக்க, அவர்களுடன் பேச என்று ஒரு தனியறை அவர் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. காலை உணவுக்கு பின்னர் சசிகலா பெரும்பாலும் இந்த அறையில் தான் தமது நேரத்தை செலவிடுகிறாராம்.

படு சுறுசுறுப்பாக இருக்கும் சசிகலா இப்போது ஒரு முக்கிய பிளானில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது 3 தொகுதி பிளான் என்று அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் தேனி மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகள், எடப்பாடி ஆகிய 3 தொகுதிகளில் உள்ள தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அதிகம் பேசுகிறாராம்.

இப்போதைக்கு இந்த 3 தொகுதிகளில் உள்ளவர்களிடம் பேசி, அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். தாம் யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்த அவர்களை கட்சியை விட்டு ஓபிஎஸ், இபிஎஸ் டீம் நீக்குவதை கண்டு இந்த நடவடிக்கையில் அவர் கால்பதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தம்முடன் இந்த 3 தொகுதிகளில் இருந்து பேசும் முக்கிய நிர்வாகிகளை என்ன செய்ய போகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதோடு மற்ற  மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம்.

இந்த தகவல்கள் அனைத்தும் அப்படியே அதிமுக தலைமைக்கு பாஸ் செய்யப்பட்டுவிட்டதாம்… அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனையில் உள்ளதாக தெரிகிறது. விரைவில் மேலும் பல கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா பேசிய ஆடியோக்கள் ரிலீஸ் ஆகும் என்று அதிரடி காட்டுகின்றனர் விஷயத்தை நன்கு அறிந்தவர்கள்….!

Most Popular