எங்கிட்ட காசு கேட்கிறாங்க…! தொண்டர்களை கேவலப்படுத்திய சீமான்
சென்னை: கட்சியில் விழா நடத்த தொண்டர்கள் பணம் கேட்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
இன்று கிருஷ்ணர் ஜெயந்தியை தமிழகத்தில் அனைவரும் வெகு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் கட்சி அலுவலகத்தில் மாயோன் பெருவிழாவாக இன்றைய தினத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டர்களுடன் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கிருஷ்ண ஜெயந்தியை அரசு விழாவாக மாற்ற வேண்டும். மாயோன் வந்த பின்னர் தான் கண்ணன், கிருஷ்ணன் பிறகு கிருஷ்ண பரம ஆத்மாவாக மாறினார்.
பண்பாட்டு ரீதியான புரட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் எங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லை. ஆனால் தொண்டர்கள் விழா நடத்த தயாராக உள்ளனர்.
G payல் பணம் அனுப்பி விடுங்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். பொருளாதார சுமையுடன் தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.