ரஜினி இப்படி பண்ணிட்டாரே..? தீயாய் பரவும் VIDEO
சூப்பர் ஸ்டார் எளிமையானவர், ஆனால் இப்படி பண்ணலாமா என்று கேட்கும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தை சுற்றோ சுற்று என்று சுற்றுகிறது.
அம்பானியை பற்றி அறியாதவர்கள் யாரும் கிடையாது. அரசியல் வாதிகளுக்கு அவ்வளவு நெருக்கம். பெரும் தொழிலதிபர், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி. அவரின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டுக்கும் திருமணம் வரும் ஜூலை 12ல் நடக்க இருக்கிறது.
அதற்காக மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை ப்ரீ wedding குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடந்து முடிந்துள்ளது. இதில் கலந்து கொள்ளாத பிரபலங்களே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, குடும்பத்துடன் சென்று இதில் பங்கேற்றார். அவர் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அந்த வீடியோ ஒருபுறம் தாறுமாறாக வைரலாகி இருந்தாலும், வேறு ஒரு வீடியோ இப்போது இணையத்தை சுற்ற ஆரம்பித்து, ரஜினிக்கு எதிரான ஒரு விமர்சனத்தை உண்டு பண்ணியிருக்கிறது. அந்த வீடியோவில் கல்யாணத்துக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் போட்டோவுக்கு போஸ் தருகிறார். அப்போது அவரின் பணிப்பெண் அருகில் வந்து நிற்க, தள்ளி போக சொல்கிறார்.
அதன் பின்னர் போட்டோ எடுக்கப்படுகிறது. இந்த காட்சி வீடியோவும் பதிவாகி சமூக ஊடகங்களில் உலாத்த ஆரம்பித்துள்ளது. எளிய மக்களுக்கு எப்போதும் சினிமாக்களில் குரல் தருபவர், பணிப்பெண்ணை தள்ள சொல்வது சரியா? என்ன இது? என்று கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
ஆனால், இதை காணும் நெட்டிசன்ஸ் குடும்ப போட்டோ என்றால் அப்படித்தான்யா எடுப்பாங்க..? இது ஒரு பிரச்னையா? என்று தாறுமாறாக ட்வீட் போட்டு ரணகளம் ஆக்கி வருகின்றனர். பதிலுக்கு பதில் என்பது போல் ரஜினிக்கு எதிராகவும் இந்த வீடியோவில் பலரும் கம்பு சுத்த ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.