மக்களே…! கொரோனா தடுப்பூசி போட்டுக்க முடியாது…! தமிழக அரசு திடீர் முடிவு…!
சென்னை: வரும் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி யாருக்கும் செலுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் படு வீரியத்தில் இருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்கள்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்ட சுகாதார தடுப்பு நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
ஆனால் பல பகுதிகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. தொடரும் இந்த நிலை காரணமாக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந் நிலையில் தமிழகத்தில் வரும் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்திற்கு கடந்த மாதம் 2 மடங்கை காட்டிலும் தடுப்பூசி டோஸ் தந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது.
இந்த மாதம் வர வேண்டிய 1.74 லட்சம் டோஸ் தடுப்பூசி இன்னமும் வரவில்லை. ஆகவே, வரும் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.