சாராயத்தை நம்பி தான் இந்த ஆட்சியே…! அண்ணாமலை ஆன் தி ப்ளோர்…!
சென்னை: மதுபான விற்பனையை நம்பி தான் தமிழக அரசு ஆட்சி நடத்துகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: மதுபான விற்பனையை நம்பி ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
இலவசங்கள் கொடுத்ததால் வளர்ச்சி என்கின்றனர். அதை திமுக நிரூபிக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த கேபி ராமலிங்கத்தை போலீசார் துன்புறுத்தி கைது செய்து இருக்கின்றனர்.
பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தால் குற்றமா? அது தப்பு என்றால் மீண்டும் அதை செய்வோம். அடக்குமுறைகளால் மிரட்டலாம், துன்புறுத்தலாம்,
நீங்கள் செய்யும் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஸ்டாலின் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குட்டி இலங்கையாக தமிழகம் மாறுகிறது என்று கூறினார்.