Sunday, May 04 12:15 pm

Breaking News

Trending News :

no image

10 ஆண்டுகள் ‘வெயிட்டிங்’ ஓவர்… முதல்வராகும் ஸ்டாலின்…!


சென்னை: கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராகிறார்.

ஆக பெரும் எதிர்பார்ப்புடன் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு தான் வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தற்போதுள்ள முன்னணி நிலவரப்படி திமுக 153 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் தனிபெரும்பான்மையுடன் இம்முறை திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. கிட்டத்தட்ட 2011ம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து திமுக அரியணை ஏறுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் பெரும் பின்னடைவை சந்தித்து திமுகவுக்கு இப்போது கை மேல் பலனாக அரியணை வாய்ப்பை மக்கள்  தந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் சில தொகுதிகளில் தான் நிலைமைகள் மாறும். எனவே திமுக வெற்றியை பெற்று, ஆட்சியமைக்கிறது என்பது உறுதியாகிறது. கலைஞர் கருணாநிதி என்ற ஆளுமை இல்லாத நிலையில் திமுக, ஜெயலலிதா இல்லாத தருணத்தில் அதிமுக தேர்தலை சந்திக்கும் சூழல் என்று பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கின்றனர் என்பது நன்றாகவே புலனாகிறது. திமுகவி வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Most Popular