Sunday, May 04 12:56 pm

Breaking News

Trending News :

no image

அலற வைக்கிறதா ஜிகா வைரஸ்..? மருந்தே கிடையாது…! அறிகுறிகள் இதுதான்…!


ஜிகா வைரஸ் தொற்று காய்ச்சலுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழலில் அதன் அறிகுறிகள் பற்றி மக்கள் இன்னமும் தெளிவில்லாத நிலையில் உள்ளனர்.

கொரோனாவின் ஆட்டமே இன்னமும் இந்த உலகில் அடங்கவில்லை. இந்தியாவிலும் அதன் ஆட்டம் தற்போது சில வாரங்களாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் தினசரி பாதிப்பு என்பது 40 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்களும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. நிலைமை இப்படி இருக்க இப்போது ஜிகா வைரஸ் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஜிகா வைரஸ் இப்போது வரை தமிழகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் கன்னியாகுமரியை ஒட்டியுள்ள கேரள பகுதியில் உள்ள ஒரு கர்ப்பிணிக்கு இந்த பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேரளாவில் 15 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

ஜிகா வைரசின் அறிகுறிகள், அது தரும் உடல் ரீதியான பாதிப்பு மக்களை அதிர வைத்துள்ளது.  ஜிகா வைரசின் அறிகுறிகள் என்ன தெரியுமா…? இந்த வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் ஏடிஸ் இன கொசுக்களினால் வரக்கூடியது.

இந்த ஏடிஸ் கொசுவை நினைவிருக்கிறதா..? டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலுக்கு காரணகர்த்தா. இந்த வைரஸ் ஒரு கர்ப்பிணியை தாக்கினால் பாதிப்பு சிசுக்கும் நேரும். பிறக்கும் குழந்தையானது பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த வைரஸ் காற்றுக்கான அறிகுறிகள் லேசான காய்ச்சல், தசை, மூட்டு வலி, வெண்படலம், சொறி, தலைவலி, வாந்தி,மயக்கம் ஆகியவையாகும். நமது உடலில் இந்த வைரஸ் கிட்டத்தட்ட 3 முதல் 14 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

நமது உடலில் இது நுழைந்துவிட்டால் 2 முதல் 7 நாட்கள் வரை அறிகுறிகள் நீடிக்கும். ஆனால் இந்த அறிகுறிகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஜிகா வைரஸ் தொற்று எந்த தடுப்பூசி, குறிப்பிட்ட வகை மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அறிகுறிகளுக்கு ஏற்ப தரப்படும் சிகிச்சை முறைகள் பயன் தரலாம்.

ஓய்வு நிச்சயம் தேவை, அதோடு அலைச்சலை குறைத்து கொள்ள வேண்டும். நீர் இழப்பை தடுக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

சரி… இந்த தொற்றில் எப்படி தற்காத்து கொள்வது..? நமது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் முக்கியம். தண்ணீரை நன்றாக காய்ச்சிய பின்னர் அருந்தவும். கொசுக்களை அண்டவே விடக்கூடாது, அது ரொம்ப, ரொம்ப முக்கியம். நமது வீட்டையும், நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, சுகாதாரமாக கொசுக்கள் இன்றி வைத்திருந்தாலோ  போதும்.. பயம் வேண்டாம் என்று நம்பிக்கை தருகின்றனர் மருத்துவ நிபுணர்கள்…!

Most Popular