தமிழக பாஜக ‘விஐபி’க்கு கொரோனா…! உடனிருந்தவர்கள் ‘ஷாக்’
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவில் முக்கிய விஐபியானுமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இன்னாருக்கு தான் வரவேண்டும் என்பது இல்லை… யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதை தான் இந்த கொரோனா தொற்று உறுதிப்படுத்தி உள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள். விஐபிக்கள், தொழிலதிபர்கள், எம்பிக்கள், முன்னாள் முதலமைச்சர்கள் என பாரபட்சம் இல்லாமல் கொரோனா தொற்று சரமாரியாக தாக்கி வருகிறது.
அந்த வகையில், இப்போது முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மதுரையில் உள்ள ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.