Sunday, May 04 12:53 pm

Breaking News

Trending News :

no image

1963க்கு பின்னர் சம்பவம் தான்…! சந்தேகமே இல்லை…! ஒரே நாளில் அதிர்ந்த மக்கள்


சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை சம்பவம் செய்த பேய் மழை இப்போது தென்தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது.

தென் தமிழகத்தில் கனமழை பெய்து தள்ளி வருகிறது. வானிலை ஆய்வு மையம் சொல்லி இருந்தாலும், இப்போது  கொட்டி வரும் மழை மக்களை அதிர வைத்துள்ளது.

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை தொடங்கிய மழை இன்னும் break விடாமல் அடித்து தூக்கி வருகிறது. மழை நீர் வெள்ளமாக மாறி ஆறுகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பி வருகிறது.

மழை, மழை, மழையை தவிர ஒன்றும் இல்லை என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து தள்ளுகிறது. பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மக்கள் அடுத்து என்ன நடக்கும் என்று தவிப்பில் இருக்கின்றனர்.

திருச்செந்தூர், வள்ளியூர், உடன்குடி என எங்கு பார்த்தாலும் மழைநீராக தெரிய, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் வரலாற்றில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது.

இங்கு, இன்று மட்டும் 260 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. அதாவது 1963ம் ஆண்டு இப்பகுதியில் பெய்த மழை அளவு 290 மில்லிமீட்டர். ஆனால் தற்போது ஒரே நாளில் 260 மிமீ என்பது சற்றே ஷாக் தரும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மழை மேலும் அடித்து ஊத்துவதால், இன்னும் அதன் அளவு எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை செட்டிக்குளம் பகுதியில் முழங்கால் அளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக இணையத்தில் வீடியோ வெளியாகி இருக்கிறது. மழை வீடியோவை பார்த்து மகிழ்ந்தாலும் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்பது போக போகவே தெரியும் என்று அறியப்படுகிறது.

மழையில் நீச்சலடிக்கும் அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular