அண்ணாத்த 'சூப்பர்' அப்டேட்…! அடுத்த வாரத்தில் இதே நாள்.. என்ன நடக்கும்னு பாருங்க
சென்னை: ரஜினியின் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 12ம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வரும் இந்த படத்தின் ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களுக்கு தலைவாழை இலை விருந்துதான்… அப்படி குஷியாகி விடுவார்கள்.
இதோ.. அவர்களுக்காக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் படக்குழுவில் இருந்து கசிய விடப்பட்டு இருக்கிறது. அதாவது வரும் 12ம் தேதி அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலிசாகிறது என்பதுதான் அது.
அன்றைய தினம் தான் படத்தின் இயக்குநர் சிவாவின் பிறந்த நாள். ஆக அன்றே வெளியிடலாம் என்று படக்குழு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாட்டம் போட வைத்துள்ளன.
இந்த படம் மற்ற படங்களை போல அல்லாமல் படு விறுவிறுப்பாக மாறுபட்ட கதைக்களம் கொண்டதாகவும், ரஜினியை வேறு ஆங்களில் காட்டி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல மால் கார் பார்க்கிங்கில் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் டப்பிங் வாய்சும் கொடுத்துவிட்டதால் அவரின் பணி அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த படம் முடிந்த பின்னர், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் புது படம் ஒன்றில் ரஜினிகாந்த் கமிட்டாகிறார் என்பது போனஸ் தகவல்…!