என்னது…? நடிகை வனிதா 4வது கல்யாணம் பண்ணிக்கிட்டாரா…?
சென்னை: 4வது திருமணம் செய்து கொண்டதாக வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை, நான் இன்னமும் சிங்கிள் தான் என்று கூறியிருக்கிறார் பிரபல நடிகை வனிதா விஜயகுமார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர் நடிகை வனிதா விஜய்குமார். பிக்பாசில் அவரது செய்கைகளை கண்டு மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே போனார்கள். அதன் பிறகு நல்ல அம்மா என்று பெயரெடுத்தார்.
அதுவும் கொஞ்சம் நாட்கள் கூட நீடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின்னர் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. பீட்டர் சதா சர்வ நேரமும் குடிக்கிறார் என்று புகார் கடிதம் வாசித்த அவர் ஒரு கட்டத்தில் அவரை பிரிந்துவிட்டதாக அறிவித்தார்.
என்ன நடந்தாலும் சரி…. அதில் இருந்து மீண்டும் தமது இயல்பான வாழ்க்கைக்கு வனிதா திரும்பி விடுவார். இந் நிலையில் வனிதா 4வது திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தகவல் பீறிட்டு கொண்டு பரவி வருகிறது.
வட மாநிலத்தை சேர்ந்த விமானி ஒருவரை காதலித்தார், அவரை காளி கோயிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி அக்கப்போரானது.
நடப்பது அனைத்தையும் பொறுத்து, பொறுத்து பார்த்த வனிதா எது நிஜம் என்பதை அறிவித்து இருக்கிறார். டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், தமக்கு திருமணம் ஆகவில்லை, நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். எந்த வதந்தியையும் பரப்ப வேண்டாம், எதையும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.