உதிக்கும் உதயசூரியன்… பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை….!
சென்னை: சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் தாமதம் நிலவியது.
தொடக்கம் முதலே திமுக கூட்டணியானது முன்னிலையில் இருந்து வருகிறது. திமுக கூட்டணியானது தற்போதைய நிலையில் 118 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியானது 83 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும் முன்னிலை வகிக்கின்றனர். போடிநாயக்கனூர் தொகுதியில் ஒபிஎஸ் முன்னிலை வகிக்கிறார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறார்.